வெளிநாட்டு பானங்களை விற்க மாட்டோம். விழிப்புணர்வு பெற்ற வணிகர்கள்
- IndiaGlitz, [Thursday,January 19 2017]
வெளிநாட்டு பாங்களில் பூச்சி மருந்து கலந்துள்ளதால் அதை உபயோகிக்க வேண்டாம் என்று ஏற்கனவே பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை அந்நிய நாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்க மாட்டோம் என வணிகர்கள் அறிவித்து வருகிறனர். முதல்கட்டமாக தேனி மாவட்ட வணிகர் பேரமைப்பு சங்கத்தினர் இந்த அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளனர்.
வெளிநாட்டு அமைப்பான பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரியும் வணிகர் சங்கத்தினர் நாளை தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டு பானங்களையும் விற்பனை செய்ய மாட்டோம் என அறிவித்து வருவது இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. தேனி வணிகர்கள் போலவே தமிழகம் முழுவதிலும் உள்ள வணிகர்கள் அறிவிக்கும் நிலையில் இந்த போராட்டம் உச்சகட்டத்தை அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.