மனத் துஷ்பிரயோகத்தினால் ஏற்படும் மன நோய்கள்.
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்கூல் காலேஜ் ஆபிஸ் இப்படி அடுத்தடுத்து வேகமாக ஓடிக்கொண்டே இருக்குற நம்ம வாழ்க்கையில என்றோ ஒரு நாள் நின்று ,நாம் எங்கு இருக்கிறோம்? என்ன செய்கிறோம்? உண்மையிலேயே நமக்கான வாழ்க்கையைத் தான் வாழ்கிறோமா! நினைத்ததைப் பேசுகிறோமா? என யோசித்தால் நிச்சயமாக எதிர்ப்பார்த்த பதில் வராது.அந்த வகையில் தினம் தினம் நாம் எதிர்க்கொள்ளும் மன துஷ்பிரயோகம்,டாக்ஸிக் உறவுகள் மற்றும் கையாளும் உத்திகள் போன்றவை பற்றி காண்போம்.
முதலில் நாம் அல்லது நம்மை சுற்றியுள்ளவர்கள் இதில் யார் டாக்ஸிக் என கண்டறியவே சில பல காலம் ஆகும்.இருந்தாலும் அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்ல வேண்டியவையே இங்கு நிறைய இருக்கின்றன.ஒரு உறவில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் எத்தனையோ ஆண்கள் பெண்கள் இருக்கிறார்கள்.இதற்கெல்லாம் என்ன காரணம்? இதனை சரி செய்ய என்ன வழி என்பதை அறிவோமா?!
டாக்ஸிக் உறவுகள்:
எது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்? ஒரு உறவு எப்போது டாக்ஸிக் ஆக மாறுகிறது? உறவுகளிடையே இருவேறு கருத்துகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும்.அது இல்லை என்று தெரிய வரும்போது அந்த இடத்தில் மோதல் ஆரம்பிக்கின்றன.தன் இணை மீது ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஆட்களும் உண்டு.இதை விரும்புபவர்களும் மேலும் சுமையாக நினைப்பவர்களும் உண்டு.ஒருவருக்கொருவர் ஒரு விதி வைத்திருப்பது,இது தான் சரி என கட்டளையிடுவது ,தொடர்ச்சியான சண்டை , முரண்பாடுகள்,என இது போன்ற பல காரணங்களினால் ஒரு அழகான உறவு டாக்ஸிக்காக மாறுகிறது.அதை சரிவர கேட்காமலும் அதிலிருந்து மொத்தமாக மீள முடியாமலும் தவிப்பர் .
ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் என்றாலே ஒரு ஆண் தான் பெண்ணை கட்டுப்படுத்துவார் என்பதல்ல.இது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒருவர் மீது உள்ள கடந்த கால தவறை அவ்வப்போது சொல்லி காட்டுவது,அதையே தனது ஆயுதமாக பயன்படுத்தி கொள்வது,வார்த்தையால் துன்புறுத்துவது ,தன் இணைக்கு முடிவு எடுக்கும் திறன் அளிக்காமல் இருப்பது, சுயமரியாதையை சீண்டுவது,கண்ணீரை கிண்டலாகப் பேசுவது இதற்கெல்லாம் இறுதி நிலையாக ஒரு உறவு டாக்ஸிக்காக மாறுகிறது.
மனதுஷ்பிரயோகம் :
மன துஷ்பிரயோகம் என்பது உணர்வு ரீதியாக ஒருவரை காயப்படுத்துவது,குறைத்து மதிப்பிட்டு பேசுவது, வார்த்தைகளால் தாக்குவது, விமர்சிப்பது, குற்றம் சாட்டுவது,அவர்களுடைய உணர்ச்சிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவது போன்றவை அடங்கும்.
ஒருவரை அடித்து துன்புறுத்துவதைக் காட்டிலும் வார்த்தைகளால் தாக்குவதே அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன என்பது உளவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.இது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்,சக பணியாளர்கள் என யார் மூலமாக வேண்டுமானாலும் ஏற்படலாம்.
எதைப் பேசினாலும் அதிகமாக கூச்சலிடுவது,கத்தி பயமுறுத்துவது,நம் எண்ணங்களை அவமதிப்பது,கேலி ,ஆணவம்,வெறுப்பு மற்றும் அக்கறையின்மை இவை அனைத்துமே ஒரு மனிதனை மனதளவில் தாக்கும்.எனவே இதுவே மன துஷ்பிரயோகம் ஆகும்.
இதை சரிசெய்ய ஒருவருக்கொருவர் வெளிப்படையாக நேர்மையாகப் பேசுவது மிகவும் நல்லது.உணர்ச்சிகளை தூண்டும் விதமாக உள்ள அனைத்தையும் தவிர்ப்பது சிறப்பு.முடியாதப் பட்சத்தில் சுமுகமான முறையில் பேசி பிரிவது மேலும் ஆகச் சிறந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments