பாக்யராஜூக்கு ஆதரவு கொடுத்த ஆண்கள் சங்கம்: இதோ பரபரப்பு கடிதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் பெண்கள் குறித்து பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் பேசிய கருத்துக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தமிழ்நாடு பெண்கள் ஆணையம் பாக்யராஜூக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் பாக்யராஜூக்கு ஆதரவாக ஆண்கள் சங்கம் தற்போது களமிறங்கியுள்ளது. இதுகுறித்து ஆண்கள் சங்கம் பாக்யராஜூகு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது
வணக்கம். தங்களை இக்கடிதம் மூலமாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 26.11,2019 அன்று “கருத்துக்களை பதிவு செய்” என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் தாங்கள் மிக துணிச்சலாக பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது என்றும் கணவன் மற்றும் குழந்தைகளை கள்ளக்காதலுக்காக மனைவி கொன்று விட்டதாக செய்திகள் வருகிறது. போன்ற கருத்துக்களை பதிவு செய்து மனதில் பட்டதை பேசுவதோடு நில்லாமல் சமுதாய நலன் சார்ந்து பெண்கள் சுய கட்டுபாடுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியது மிகவும் பாராட்டத்தக்கது. மட்டுமல்லாமல் துணிச்சலான கருத்தும் ஆகும்.
தொடர்ந்து நீங்கள் இந்திய கலாச்சாரத்தை சிதைக்கின்ற வகையிலும் பால்மனம் மாறா குழந்தைகளின் கொடூர கொலைகளுக்கு காரணமாக இருக்கும் பெண் கிரிமினல்களை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிட்டு சமுதாய சீர்திருத்தத்தினை ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம். அதற்கு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் உறுதுணையாக பக்க பலமாக இருக்கும் என்பதை இக்கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களை பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என பலரும் ஓடி ஒதுங்கி கொள்ளும் இந்த காலச் சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துக்களை தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் பாராட்டுகிறது. தொடரட்டும் உங்கள் சமுதாயப் பணி. வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com