பிக்பாஸ் வீட்டில் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கமல்ஹாசனுக்கு முன்னாள் போட்டியாளர் கோரிக்கை..

  • IndiaGlitz, [Saturday,November 11 2023]

பிக் பாஸ் வீட்டில் பிரதீபால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்றிய சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை. பிரதீப்பை வெளியேற்றியது தவறு என்றும் குறிப்பாக பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டை கூறி வெளியே அனுப்பியது மிக மிக தவறு என்றும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்கள் பலரும் கமல்ஹாசன் எடுத்த முடிவு தவறு என்றும் அவர் தனது தவறை திருத்தி, மீண்டும் பிரதீப்பை பிக் பாஸ் வீட்டிற்குள் கமல் அழைத்து வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் தினேஷை கவிழ்ப்பதற்காக சதி செய்கின்றனர். குறிப்பாக ’தினேஷிடம் நெருங்கி பழக வேண்டும், அவருடைய மனைவி ரட்சிதா குறித்து பேச வேண்டும், ரட்சிதா குறித்து அவரை பேச வைத்,து அவர் வருத்தம் அடையும்போது, அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும், அதன் பிறகு அவரை கவிழ்க்க வேண்டும் என்று மிகவும் மெதுவாக பேசுகின்றனர் இவர்களது அடுத்த திட்டம் தினேஷை கவிழ்ப்பதாக தான் உள்ளது.

இந்த வீடியோவுக்கு நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி தனது கருத்தை பதிவு செய்தல். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘பிக்பாஸ் வீட்டில் உண்மையில் ஆண்களுக்கு தான் பாதுகாப்பில்லை. குறிப்பாக மாயா மற்றும் பூர்ணிமாவால் ஆண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை, கமல்ஹாசன் இவர்களை கண்டிப்பாரா? தட்டி கேட்பாரா? என்று பதிவு செய்துள்ளார்.

இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் மாயா குரூப்பை நிச்சயம் தட்டிக் கேட்டே ஆக வேண்டிய நிலை கமலஹாசனுக்கு ஏற்பட்டு உள்ளது என்பது தெரிய வருகிறது.