'96', 'பேட்ட' படங்களை சம்பந்தப்படுத்திய மீம்ஸ்: ரசித்து ஷேர் செய்த த்ரிஷா

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் இன்னும் '96' படத்தின் பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை என்று தெரிகிறது. நேற்று நடைபெற்ற 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில் எல்லோருடைய பெயரை சொல்லி பேசிய த்ரிஷா, விஜய்சேதுபதியை மட்டும் 'ராம்' என்று அழைத்தார். அதேபோல் விஜய்சேதுபதி பேசியபோது, 'ரஜினி சார்... இது என் ஜானு சார்’ என்று கூறியபோது அரங்கமே அதிர்ந்தது.

இந்த நிலையில் ஒரு மீம்ஸ் கிரியேட்டர் '96' மற்றும் 'பேட்ட' படங்களை சம்பந்தப்படுத்தி ஒரு மீம்ஸை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த மீம்ஸில் ராமும் ஜானுவும் காதலிப்பதாகவும், ஆனால், சேர முடியாமல் பிரிந்துவிடுவதாகவும், அதன்பின் பேட்ட ரஜினியும் த்ரிஷாவும் சேருவதாகவும், அதுவரை சாதுவாக இருந்த ராம், அதை பார்த்து கொந்தளித்து ஜித்துவாக மாறி துப்பாக்கி தூக்குவதாகவும் படக்கதை போல் இருந்தது.

இந்த மீம்ஸை ரசித்த நடிகை த்ரிஷா, அதனை ரீடுவீட் செய்துள்ளார். மேலும் நெட்டிசன்கள் பலர் இந்த மீம்ஸை ரசித்து வருகின்றனர்.