விவாகரத்து தொடர்ந்தால் யார் பெரிய பணக்காரி? மெலானியா, இவாங்காவைத் தொடரும் அடுத்த கேள்வி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கடும் பின்னடவை சந்தித்த நிலையில் தனது குடும்ப வாழ்க்கையிலும் அவர் தோல்வியை சந்திக்க உள்ளார் என்ற தகவல் கடந்த சில தினங்களாகவே கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மெலானியா தனது காதல் கணவர் டிரம்பை விவாகரத்து செய்தால் அவருக்கு எவ்வளவு நட்டத்தொகை கிடைக்கும்? இதனால் டிரம்பின் மகள் இவாங்காவைவிட பெரிய சொத்து உள்ளவராக மாறுவாரா என்ற கேள்விகள் தற்போது ஊடகங்களில் வைக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக மெலானியா தனது திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளப்போகிறார் என்ற தகவலை வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் ஒமரோசா மணிகோல்ட் நியூமன் என்பவர் உறுதிப்படுத்தி இருந்தார். அதையடுத்து அவருக்கு 63 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் பரோன் பெர்க்மேன் பாட்ஜர் நியூமேன் எனும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் இவ்வளவு பெரிய தொகையைப் பெறப்போகும் மெலானியா டிரம்ப்பின் மகள் இவாங்காவை விட பெரிய பணக்காரியாவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற அடுத்த சர்ச்சை தற்போது ஆரம்பித்து இருக்கிறது. டிரம்பிற்கு ஏற்கனவே தனது 2 மனைவிகள் மூலம் 4 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது 3 ஆவது மனைவியாக இருக்கும் மெலானியா(50) கடந்த 2017 ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தைப் பெற்றார். அதே நேரத்தில் மிகப்பெரிய ஹோட்டல் பிசினஸ் குடும்பமான டிரம்பின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் பிரபலமான மனிதர்களாக மாறினார்கள்.
1998 ஆம் ஆண்டு மெலானியா டிரம்ப்பை சந்திக்கும்போது Vogue, Vanity Fair, New York Magazine போன்ற பல பிரபலமான மேகசினுக்கு மாடலாக பணியாற்றி வந்தார். நியூயார்க்கில் பிரபலமான மாடல் என்ற அந்தஸ்துக்கு சொந்தக்காரராகவும் அவர் இருந்து வந்தார். அதோடு ஆபரண நகைக்கடை மற்றும் அழகுச் சாதனப் பொருட்கள் போன்ற நல்ல வருமானம் கொண்ட சில தொழில்களையும் அவர் தன்வசம் வைத்திருந்தார். இதனால் டிரம்ப்பின் மனைவியாக வருவதற்கு முன்னதாகவே அவர் பணக்காரர் என்று சொல்லும் அளவிற்கு போதுமான தொகையை கைவசம் வைத்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப்பை மெலானியா விவாகரத்து செய்தால் அவருக்கு 38.6 மில்லியன் டாலர் தொகை கிடைக்கும் என்று Celebrity New York எனும் பத்திரிக்கை குறிப்பிடுகிறது. இதன்மூலம் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பெறுவார் எனக் கருதப்படுகிறது. ஆனால் இவாங்காவோடு ஒப்பிடும்போது மெலானியாவின் சொத்து மதிப்பு குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. காரணம் இவாங்காவின் சொத்து மதிப்பு 289 மில்லியன் டாலர் என்று போப்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது. அதோடு மாடலிங் துறையிலும் இவர் பெரும் பணத்தைச் சம்பாதித்து வருகிறாராம்.
அதேபோல டிரம்ப் குடும்பத்தின் வர்த்தக நிறுவனத்தில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார் இவாங்கா. இந்த வேலையின் மூலம் 27 மில்லியன் டாலர்களை அவர் சம்பாதிக்கிறார். அதோடு ஹொட்டல் பிசினஸில் கொடி கட்டி பறக்கும் டிரம்ப் குடும்பத்தின் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் இவரே செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மெலானியா, இவாங்கா எனும் இரண்டு மாடல்களிலும் இவாங்காவே அதிக சொத்துடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout