close
Choose your channels

அத்தான்.. உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? கார்த்தியின் 'மெய்யழகன்' டிரைலர்..!

Monday, September 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்க இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த "96" என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் "மெய்யழகன்". இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

"96" படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த ட்ரெய்லரில் ஆரம்பத்தில் சில காட்சிகள் காமெடியாக இருந்தாலும், அதன் பிறகு திடீரென சென்டிமென்ட் மற்றும் சீரியஸாக உள்ளதைத் தொடர்ந்து, இந்த படத்தில் அத்தான் என்ற உறவை இதுவரை தமிழ் சினிமா சொல்லாத வகையில் வித்தியாசமாக இயக்குனர் பிரேம்குமார் சொல்லியிருக்கிறார் என தெரிகிறது.

மொத்தத்தில், "மெய்யழகன்" படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment