முன்னாள் முதல்வர் பேரனை திருமணம் செய்யும் தனுஷ் பட நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நடிகை, முன்னாள் முதல்வர் ஒருவரின் பேரனை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகிய நடிகை மெஹ்ரீன் ப்ரீஸ்தா அதன் பின்னர் விஜய்தேவரகொண்டாவின் ‘நோட்டோ’, தனுஷின் ’பட்டாஸ்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை மெஹ்ரீனுக்கும் முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன்லால் அவர்களின் பேரன் பாவ்யா பிஷ்னாய் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அடுத்து விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பாவ்யா பிஷ்னாய் அவர்களும் ஒரு அரசியல்வாதி என்பதும் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாவ்யா பிஷ்னாய் மற்றும் மெஹ்ரீன் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout