ராஜு முருகனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் கதை வசனம் எழுதிய திரைப்படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபதி, வேல ராமமூர்த்தி, ஆர்ஜே விக்னேஷ், உள்பட பலர் நடித்த 'மெஹந்தி சர்க்கஸ்' திரைப்படத்தை ராஜு சரவணன் இயக்கியுள்ளார். இவர் ராஜூ முருகனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுளது.
சீன் ராடன் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ் குமார் கலை இயக்கத்தில், பில்ல ஜெகன் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சர்க்கஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர், டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
??#MehandiCircus is Here! ??
— Studio Green (@StudioGreen2) April 2, 2019
An Epic Romantic Tale ❤️From April 19!
Come, Swoon to de Tunes of @RSeanRoldan ??@Dir_Rajumurugan @Madhampatty #SaravanaRajendran @Music_Santhosh @SF2_official @battatawada @YugabhaarathiYb @thinkmusicindia #VellattuKannazhagi#MehandiCircusOnApril19 pic.twitter.com/oAHVe4kUB0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com