close
Choose your channels

ஒரு வயதை பூர்த்தி செய்த செல்ல மகன்: மேக்னாராஜின் நெகிழ்ச்சியான பதிவு

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மேக்னாராஜ் கணவர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார் என்பதும், இதனை அடுத்து அக்டோபர் 22ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சரியாக மேக்னாராஜ் குழந்தை ஒரு வயதை பூர்த்தி செய்வதை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் குழந்தை, எங்கள் உலகம், நமது பிரபஞ்சம், நம் அனைத்துமே இந்த குழந்தை தான். எங்கள் இளவரசன் ஒரு வருடம் பூர்த்தி செய்துள்ளான். அவன் கண்களை உருட்டி என்னை முத்தமிடுகிறான். அவனை நான் மிகவும் நேசிக்கிறேன்.

என் குழந்தை மிகவும் வேகமாக வளர்கிறான். நாங்கள் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து இருக்கவே விரும்புகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா. என் அம்மாவும் அப்பாவும் உன்னை நேசிக்கிறார்கள்’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment