யோகிபாபுவுடன் நடனமாடும் பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள படம் 'தர்ம பிரபு'. எமதர்மனாக ராதாரவியும், எமதர்மன் மகனாக யோகிபாபுவும் சித்திரகுப்தராக ரமேஷ் திலக்கும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த படத்திற்காக ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது. சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியான பிரிவுகளும் உண்டு
கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் இந்த செட்டை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை மேக்னா நாயுடு நடனமாடுகிறார்.
முத்துகுமரன் இயக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படம் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத படமாக உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com
Comments