யோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிரபல கவர்ச்சி நடிகை?

  • IndiaGlitz, [Saturday,December 29 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் 'தர்மபிரபு. எமலோகத்தில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ராதாரவி எமனாகவும், எமனின் மகனாக யோகிபாபுவும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இதே படத்தில் இன்னொரு கவர்ச்சி நடிகையான மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. யோகிபாபுவுடன் மேக்னா நாயுடு ஆடும் நடனக்காட்சி ஒன்றும் இந்த படத்தில் இருப்பதால் இருவரும் ஜோடியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது

முத்துக்குமரன் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

More News

கொல மாஸ் 'விஸ்வாசம்' டிரைலர்: தல ரசிகர்கள் உற்சாகம்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த படத்தின் முன்பதிவுகளும் ஒருசில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது.

ரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்?

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் அவர் அரசியல் களத்தில் குதிப்பதற்குள் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

முடிவுக்கு வந்தது நயன்தாராவின் அடுத்த படம்

தல அஜித்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில்

நடுரோட்டில் ஐஸ்வர்யா-யாஷிகா கொடுத்த முத்தம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் நெருக்கமான தோழிகளாகிவிட்டது தெரிந்ததே.

'96' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்கள் தங்களுக்கு நடந்த நிகழ்வுகள்