கணவரின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத மேக்னா ராஜ்: உருக வைக்கும் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,June 09 2020]

நடிகர் அர்ஜுன் நெருங்கிய உறவினரும் நடிகை மேக்னா ராஜின் கணவருமான நடிகர் சிரஞ்சீவி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நடிகை மேக்னா ராஜ் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், தான் தந்தை ஆவப்போவதை வெளியில் அறிவிக்கும் முன்னரே சிரஞ்சீவி மறைந்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது

மேலும் எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாமல் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகர் சிரஞ்சீவிக்கு திடீரென மாரடைப்பு வந்தது எப்படி என்பதே புரியாமல் அவரது குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர். குடும்பத்துடன் மதிய உணவு சாப்பிட படுக்கையில் இருந்து எழுந்த சிரஞ்சீவிக்கு திடீரென மாரடைப்பு வந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிர் பிரிந்தது அவரது குடும்பத்தினர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்லது.

இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் தனது கர்ப்பிணி மனைவியை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொண்டு தன்னுடைய உடலையும் பிட்டாக வைத்துக் கொண்டு அவ்வப்போது மகிழ்ச்சியுடன் தங்களது குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த சிரஞ்சீவி, திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததை அவரது நெருங்கிய உறவினர்களால் கூட நம்ப முடியவில்லை

இந்த நிலையில் சிரஞ்சீவியின் உடல் நேற்று மாலை அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அவரது உடலை கட்டி பிடித்து நெற்றியில் முத்தம் கொடுத்து மேக்னாராஜ் கதறி அழுத காட்சியின் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் சோகக் கடலில் மூழ்கடித்து உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் யாரும் ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் இருக்க மாட்டார்கள். அந்த அவ்வளவு உருக்கமாக இந்த வீடியோ உள்ளது

மேலும் கர்ப்பிணியாக இருக்கும் மேக்னா ராஜ் அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அவருடைய உறவினர்கள் திணறி வருகின்றனர்

More News

10ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கீடு எப்படி? முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து

கேள்விக்குறியாகி இருக்கும் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றி: அமெரிக்காவில் தொடரும் இனவெறிக்கு எதிரான போராட்டம்!!!

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது.

4000ஐ தாண்டிய ராயபுரம், 3000ஐ தாண்டிய தண்டையார்பேட்டை: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: ஆல் பாஸ் என முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற இது குறித்த வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு

இந்திய - சீன எல்லையில் நடப்பது என்ன??? சீன வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்!!!

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த மாதத்தின் தொடக்கம் முதலே சீன இராணுவ வீரர்களை குவிக்கத் தொடங்கியது.