அரசியல்வாதி மகனுடன் திருமணம் உண்மையா? மேகா ஆகாஷ் அம்மா விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசியல்வாதியின் மகனை நடிகை மேகா ஆகாஷ் திருமணம் செய்ய போவதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் இன்று காலை முதல் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மேலும் சமூக வலைதளங்களில் அந்த அரசியல்வாதி மகன் யார் என நெட்டிசன்கள் தேட தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷின் அம்மா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பிரபல அரசியல்வாதியின் மகனுடன் தனது மகளுக்கு திருமணம் என்ற செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் அதில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மேகா ஆகாஷின் திருமணம் செய்து குறித்து முடிவு செய்தவுடன் முறைப்படி நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்றும் அதுவரை தயவு செய்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் 'மழை பிடிக்காத மனிதன்’ என்ற தமிழ் படத்திலும் இரண்டு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேகா ஆகாஷ் நடித்த ’BOO’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஜியோ சினிமாவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com