தமிழக அரசியல்வாதியின் மகனை மணக்கிறாரா மேகா ஆகாஷ்? தீயாய் பரவும் தகவல்..!
- IndiaGlitz, [Thursday,June 08 2023]
பிரபல தமிழக அரசியல்வாதியின் மகனை நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இணையதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். சிம்புவின் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த மேகா ஆகாஷ் சமீபத்தில் வெளியான ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அரசியல்வாதி தற்போது பிரபல கட்சி ஒன்றின் எம்பி ஆக இருப்பதாகவும் இந்த திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேகா ஆகாஷ் இருக்கும் அரசியல்வாதியின் மகனை மணக்க இருப்பது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.