பாரதிராஜாவுடன் முதன்முதலாக இணையும் மம்முட்டி

  • IndiaGlitz, [Thursday,September 15 2016]

இயக்குனர் இமயம் பாரதிராஜா மிகச்சிறந்த இயக்குனர் மட்டுமின்றி நல்ல நடிகராகவும் பல படங்களின் மூலம் நிரூபித்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'குரங்கு பொம்மை'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்புக் நாளை வெளிவரவுள்ளது.
இந்த ஃபர்ஸ்ட்லுக்கை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். இதுவரை பாரதிராஜா இயக்கத்தில் மம்முட்டி நடிக்கவில்லை என்றாலும் இந்த படத்தின் டீசரை வெளியிட்டு அவருடன் முதன்முதலாக இணைந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் நடிகர் விதார்த் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் நிதிலன் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.