close
Choose your channels

மேகா ஆகாஷ் கணவர் பிரபல அரசியல்வாதியின் மகனா? 2 படங்களில் உதவி இயக்குனர் பணி..!

Sunday, August 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மேகா ஆகாஷ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன் முடிந்ததாக அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அவருடைய வருங்கால கணவர் பிரபல அரசியல்வாதியின் மகன் என்று தெரியவந்துள்ளது.

தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ சிம்பு நடித்த ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ உள்பட சில படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். இவர் சமீபத்தில் வெளியான ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கூட நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தனக்கும் சாய் விஷ்ணு என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறியதோடு அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்த நிலையில் ரசிகர்கள் இந்த வருங்கால தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சாய் விஷ்ணுவின் தந்தை காங்கிரஸ் கட்சியின் பிரபல அரசியல்வாதி திருநாவுக்கரசர் மகன் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ ’கபாலி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாகவும், அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி தற்போது பிசினஸ் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாய் விஷ்ணு தனது வருங்கால மனைவி மேகா ஆகாஷ் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்று திருமண அழைப்பிதழை கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சாய் விஷ்ணுவின் தந்தை திருநாவுக்கரசருக்கு நெருங்கிய நண்பர் என்பதும் அதேபோல் மேகா ஆகாஷ், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment