இந்தியாவின் டாப்-10 பணக்காரர்கள் யார்? போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல்!
- IndiaGlitz, [Thursday,October 07 2021]
சர்வதேச பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கும் இந்தியாவின் 100 இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியாவிலேயே பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் ஒவ்வெரு ஆண்டும் இந்திய அளவிலான 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் முதல் பணக்காரராக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி இடம்பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய சாத்து மதிப்பு 92.7 பில்லியன். வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துவிடும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா நேரத்தில் உலகம் முழுவதும் பொருளாதார இழப்பீடு, வறுமை, வேலையின்மை எனப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனால் இந்த நேரத்தில் உலகம் முழுவதும் பணக்காரர்களின் சொத்துமதிப்பு பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த ஆண்டு கொரோனா நேரத்தில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 50% ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 100 இந்தியப் பணக்காரர்களின் சொத்து மத்திப்பு 775 பில்லியன் டாலர்களாக அதிகரித்து இருக்கிறது என்றும் கடந்த 12 மாதங்களில் மட்டும் 257 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இதைத்தவிர கடந்த ஆண்டில் இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் குறைந்தது 61 பேரின் சொத்து மதிப்பு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்திருக்கலாம் என்றும் இதில் 80% க்கும் அதிகமான பணக்காரர்களின் சொத்துமதிப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது என்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியல்
1. முகேஷ் அம்பானி -92.7 பில்லியன்
2. கவுதம் அதானி – 74.8 பில்லியன்
3. சிவநாடார் – 31 பில்லியன்
4. ராதாகிருஷ்ணன் தமானி – 29.4 பில்லியன்
5. சைரஸ் பூனாவாலா – 19 பில்லியன்
6. லக்ஷ்மி மிட்டல் – 18.8 பில்லியன்
7. சாவித்ரி ஜிண்டால் – 18 பில்லியன்
8. உதய் கோட்டக் – 16.5 பில்லியன்
9. பலோன்ஜி மிஸ்திரி – 16.4 பில்லியன்
10. குமார் பிர்லா – 15.8 பில்லியன்