தென்னிந்தியாவில் தடம்பதித்த முதல் ஏஐ செய்தி வாசிப்பாளர்… சுவாரசியமான சிறப்பு அம்சம்!

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

முன்னதாக வட இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் ‘லிசா‘, ‘சனா‘என்று இரு செயற்கை வாசிப்பாளர்கள் அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில் தற்போது கர்நாடகத்தில் புதிய மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மனிதர்களின் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ ஆர்டி பிசியல் இன்டலிஜென்ஸ்) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் தற்போது தகவல் தொடர்பியல், மனித வளத்துறை என்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படபோகும் சாதக, பாதகங்கள் குறித்து கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனாலும் இந்த விவாதங்களைத் தாண்டி தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தற்போது சூழல்கள் மாறிக்கொண்டே வருகின்றன. முன்னதாக வெளிநாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சில ரோபோக்களை உருவாக்கி அதை சிறிய வேலைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்பம் அடங்கிய வக்கீல் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த சோஷியல் மீடியா பெண் பிரபலம் ஒருவர் தன்னுடைய உருவத்தை வைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் டேட்டிங் ஆப் ஒன்றை உருவாக்கி இருந்தார். இந்த ஆப்பிற்கு வரும் வாடிக்கையாளர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கும் பெண்ணிடம் பாலியல் உணர்வு சார்ந்து பேசிக்கொள்ளலாம். தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கு அந்த செயற்கை பெண் பதிலளிப்பார் என்று கூறப்பட்டது.

மேலும் இன்னும் ஒடிபடி மேலேபோய் நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தனக்கான கணவரையே உருவாக்கி அதனுடன் பழகி வந்தார்.

இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பிரபல பத்திரிக்கை நிறுவனமாக இருந்துவரும் இந்தியா டுடே குழுமம் தனது செய்தி நிறுவனமான ஆஜ் தக்கிற்காக ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட பெண்ணை உருவாக்கி இருந்தது. ‘சனா’ என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேர்காணலிலும் ஈடுபட்டு இருந்தார்.

அதையடுத்து ஒடிசா மாநிலத்தில் இயங்கிவரும் OTV எனும் செய்தி நிறுவனம் தங்களது நிறுவனத்தில் செய்தி வாசிப்பதற்காகவே ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட பெண்ணை அறிமுகப்படுத்தி இருந்தனர். ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் செய்திகளை வாசிக்கும் அந்தப் பெண் மனித உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டே புடவை கட்டி செய்தி வாசிப்பதை கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பார்த்து வருகிறோம் .

அந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் பவர் டிவி எனும் செய்தி நிறுவனம் தனது நிறுவனத்தில் செய்தி வாசிப்பதற்காக ‘சௌந்தர்யா‘ எனும் மெய்நிகர் செய்தி வாசிப்பாளரைப் பயன்படுத்தி இருக்கிறது. தற்போது செய்திகளை மட்டுமே வாசித்துவரும் சௌந்தர்யா எதிர்காலத்தில் அனைத்துவித நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்குமாறு தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டு இருக்கிறது.

இதனால் சனா, லிசாவைத் தொடர்ந்து இந்தியாவில் சௌந்தர்யா என்ற மற்றொரு செயற்கை நுண்ணறிவு மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி விஜய் பயிலகம்': தொடங்கும் தேதியை அறிவித்த புஸ்ஸி ஆனந்த்..!

தளபதி விஜய் தமிழக முழுவதும் இரவு நேர பாடசாலை அமைக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இதனை விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உறுதி செய்துள்ளார்.

'இந்த நிமிஷம் வரைக்கும் என்னை ஏமாத்திக்கிட்டு இருக்க: பரத், வாணிபோஜனின்  'லவ்' டிரைலர்..!

பரத் மற்றும் வாணி போஜன் முக்கிய வேடங்களில் நடித்த 'லவ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சரத்குமாருக்கு ராதிகா கொடுத்த அன்பு முத்தம்.. என்ன விசேஷம்

நடிகர் சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நடிகை ராதிகா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம்

தந்தையுடன் இணைந்து பிளாக் பெல்ட் வாங்கிய தமிழ் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் நடிகை கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

டாஸ்மாக்கில் மது வாங்கும் இளம்பெண்கள்.. நடிகை கஸ்தூரியின் கமெண்ட்டுக்கு குவியும் கண்டனங்கள்..!

டாஸ்மாக் மதுக்கடையில் இரண்டு இளம் பெண்கள் மது வாங்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகை கஸ்தூரிக்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் அதற்கு விளக்கம்