சிகரெட் விளம்பரத்தில் வரும் சின்னப்பாப்பா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,November 25 2017]

திரைப்படங்களில் படம் திரையிடப்படுவதற்கு முன்னர் ஒரு விளம்பரத்தை நாம் அனைவரும் கண்டிப்பாக பார்த்திருப்போம். புகைப்பிடித்தல் உங்களுக்கு தீங்கு தரும், அதோடு உங்களை விரும்புபவர்களுக்கும் புகைப்பிடிப்பது கேடு தரும்' என்ற விளம்பரத்தில் ஒரு சிறுமி நடித்திருப்பார். இந்த சிறுமியின் முகத்தை பார்த்தவுடன் அவருடைய தந்தை சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுவது போன்று அந்த விளம்பரம் முடியும்

இந்த விள்ம்பரம் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறையால் கடந்த 2008ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டபோது இந்த குழந்தையின் வயது 7, தற்போது 17 வயதில் டீன் ஏஜ் இளம்பெண்ணாக இருக்கும் இவரது பெயர் சிம்ரன் நடேகர். இவர் சமூக வலைத்தளங்களிலும் பிரபலம். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே 38000 ஃபாலோயர்கள் உள்ளனர்.

பல பாலிவுட் படங்களிலும், விளம்பர படங்களிலும் சிம்ரன் நடித்து வருகிறார். விரைவில் தென்னிந்திய படங்களிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More News

எம்.எஸ் சுப்புலட்சுமி கொள்ளுப்பேத்தி பாடகியாக அறிமுகமாகும் தமிழ்ப்படம்

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளுப்பேத்தி ஐஸ்வர்யா 'குறள் 146' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிறார்.

அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்த விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர்

அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசிய விஜய் ஆண்டனிக்கு இயக்குனர் கருபழனியப்பன் தனது ஸ்டைலில் வாழ்த்து கூறி ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்

'வேலைக்காரன்' இசை வெளியீடு தேதியை அறிவித்த அனிருத்

வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு தேதியை இசையமைப்பாளர் அனிருத் அதிகாரபூர்வமாக வீடியோ செய்தி ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

அஜித்தின் 'விசுவாசம்' டைட்டிலுக்கு பின்னணி இதுதானா?

அஜித் நடிக்கும் 58வது படத்திற்கு 'விசுவாசம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்தததே. கடந்த சில ஆண்டுகளாக அஜித் நடிக்கும் படத்தின் டைட்டில் படப்பிடிப்பு நடைபெறும்போதுதான் வெளியாகும்.

தினகரன் போட்டி: மீண்டும் ஆர்.கே.நகரில் கொட்டப்போகும் பணமழை

சென்னை ஆர்.கே.நகரின் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது முதல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகியுள்ளன.