ரியல் பக்சிராஜா யார் என்று தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,November 30 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நேற்று வெளியாகி பல வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது. அனைத்து தரப்பினர்களின் அமோக ஆதரவை பெற்று இந்த படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியை அடுத்து அக்சயகுமாரின் நடிப்பு பெரிதும் பேசப்படுகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக பிளாஷ்பேக் காட்சியில் வரும் பட்சிராஜா என்ற பறவைகள் ஆராய்ச்சியாளர் குறித்த காட்சிகள் படத்தின் ஹைலைட் காட்சிகள் ஆகும்.

இந்த நிலையில் ரியல் பட்சிராஜா குறித்த தகவல் வெளீவந்துள்ளது. சலீம் அலி என்ற பறவைகள் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானி, இந்தியாவின் பறவை மனிதன் என்று அழைக்கப்பட்டார். பறவைகள் குறித்த இவரது சிறந்த ஆராய்ச்சியை பாராட்டி இந்திய அரசு இவருக்கு 'பத்மபூஷன்' விருது கொடுத்து கெளரவித்தது. கடந்த 1987ஆம் ஆண்டு இவர் மறைந்தார். இவர் தான் ஷங்கரின் பட்சிராஜா கேரக்டருக்கு மூலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அக்சயகுமாரின் கெட்டப்பும் கிட்டதட்ட இவர் போலவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

பிரபல இரட்டை இயக்குனர்களில் ஒருவர் காலமானார்.

தமிழ் சினிமாவில் மிக அரிதாக இருந்த இரட்டை இயக்குனர்களில் ராபர்ட்-ராஜசேகர் குறிப்பிடத்தக்கவர்கள்.

வெள்ள நிவாரணப்பணி: நிதி அனுப்ப வேண்டிய மத்திய அரசு பில் அனுப்பிய கொடுமை!

கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ள, ஏற்பட்டு பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டது

நான் என்ன சாதின்னு தேடி கண்டுபிடிங்கடா....ரித்விகா ஆவேசம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வின்னர் ரித்விகாவுக்கு ஒருபக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் அவர் குறிப்பிட்ட சாதி

தெலுங்கை அடுத்து மலையாள திரையுலகில் காலடி வைக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் யாருடைய உதவியும் இன்றி உழைப்பால் முன்னேறிய ஒருசில நடிகர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர்.

தமிழக கவர்னருக்கு நடிகர் விஜய்சேதுபதியின் வேண்டுகோள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இந்த 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம்