எனக்கும் முகினுக்கும் என்னெல்லாம் நடந்துச்சுன்னு சொல்லட்டுமா? மிராமிதுனின் புதிய வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சர்ச்சை போட்டியாளர் மீராமிதுன் குறித்த ஆடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அவர் அந்த ஆடியோவுக்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:
பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக நான் சென்றபோது என்னை பற்றிய ஆடியோ ஒன்று பரபரப்பாக வெளியில் பரவி வந்தது. அந்த ஆடியோவில் கண் காது மூக்கு வைத்து நான் பேசாததை எல்லாம் பேசியதாக கூறி என்னை தலைப்புச் செய்தியாக்கி விட்டார்கள். இதை வைத்தே பலர் யூடியூப் சேனல் ஆரம்பித்து வாழ்ந்து வந்தார்கள் என்பதில் எனக்கு சந்தோஷமே
இந்த நிலையில் முகினின் பெயரை நான் பெயரை கெடுக்க வேண்டும் என்று கூறியதாக அந்த ஆடியோவில் இருந்தது. நான் வேறொரு சூழலில் பேசிய ஆடியோவை இந்த ஆடியோவுடன் இணைத்து ஒரு போலியான வீடியோவை வைரலாக்கியுள்ளனர். இந்த ஆடியோவை நான் பேசினேனா? இல்லையா? என்பதை கூட உறுதி செய்யாமல் பலர் இதனை வெளியிட்டுள்ளார்கள்
உண்மையில் முகினுக்கும் எனக்கும் பிக்பாஸ் வீட்டில் என்னென்னவெல்லாம் நடந்தது என்பதை நான் சொல்லி இருந்தால், முகினின் பெயர் டேமேஜ் ஆகி இருக்கும். அவர் டைட்டில் வின் பண்ணுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கும். முகினுக்கு என்னால் எந்த கெட்ட பேரும் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், என்னால் அவர் டைட்டில் வின் பண்ணுவதில் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான் நான் அமைதியாக இருந்தேன் என்று மீராமிதுன் கூறியுள்ளார்.
Clearing the air on #BiggBossTamil3 controversies. This will give clarity and how i took all the blame so others got fame. Part 1 of 3 videos. @MugenRaoOffl @cineulagam @galattadotcom @behindwoods @silverscreenin @igtamil @PTTVOnlineNews pic.twitter.com/h9hwQtv5SE
— Meera Mitun (@meera_mitun) October 13, 2019
Final video to clear the controversies about me in #BiggBossTamil3 pic.twitter.com/XxyOYQYEUE
— Meera Mitun (@meera_mitun) October 13, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments