எனக்கும் முகினுக்கும் என்னெல்லாம் நடந்துச்சுன்னு சொல்லட்டுமா? மிராமிதுனின் புதிய வீடியோ

பிக்பாஸ் சர்ச்சை போட்டியாளர் மீராமிதுன் குறித்த ஆடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அவர் அந்த ஆடியோவுக்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:

பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக நான் சென்றபோது என்னை பற்றிய ஆடியோ ஒன்று பரபரப்பாக வெளியில் பரவி வந்தது. அந்த ஆடியோவில் கண் காது மூக்கு வைத்து நான் பேசாததை எல்லாம் பேசியதாக கூறி என்னை தலைப்புச் செய்தியாக்கி விட்டார்கள். இதை வைத்தே பலர் யூடியூப் சேனல் ஆரம்பித்து வாழ்ந்து வந்தார்கள் என்பதில் எனக்கு சந்தோஷமே

இந்த நிலையில் முகினின் பெயரை நான் பெயரை கெடுக்க வேண்டும் என்று கூறியதாக அந்த ஆடியோவில் இருந்தது. நான் வேறொரு சூழலில் பேசிய ஆடியோவை இந்த ஆடியோவுடன் இணைத்து ஒரு போலியான வீடியோவை வைரலாக்கியுள்ளனர். இந்த ஆடியோவை நான் பேசினேனா? இல்லையா? என்பதை கூட உறுதி செய்யாமல் பலர் இதனை வெளியிட்டுள்ளார்கள்

உண்மையில் முகினுக்கும் எனக்கும் பிக்பாஸ் வீட்டில் என்னென்னவெல்லாம் நடந்தது என்பதை நான் சொல்லி இருந்தால், முகினின் பெயர் டேமேஜ் ஆகி இருக்கும். அவர் டைட்டில் வின் பண்ணுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கும். முகினுக்கு என்னால் எந்த கெட்ட பேரும் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், என்னால் அவர் டைட்டில் வின் பண்ணுவதில் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான் நான் அமைதியாக இருந்தேன் என்று மீராமிதுன் கூறியுள்ளார்.

More News

கார்த்தியின் 'கைதி' சென்சார் தகவல்

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் படமான 'கைதி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்

திருச்சியில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் சமீபத்தில் கோடிக்கணக்கில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முருகன் உள்பட ஒரு சில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்

கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை

சுரேஷ் காமாட்சி இயக்கிய 'மிக மிக அவசரம்' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் திடீரென திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகவில்லை.

இதை டிரெண்ட் பண்ணலாமா? தல, தளபதி ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்

காமெடி நடிகர் விவேக் தனது திரைப்படங்களில் காமெடி மட்டுமின்றி முடிந்த அளவு சமூக கருத்துக்களை தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே. மூடநம்பிக்கை ஒழிப்பு உள்பட பல விஷயங்களை அவர் தனது காமெடி மூலம் மக்களுக்கு புரியும்படி கூறி வருகிறார். 

ஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்

வாட்ஸ்அப் இணையதளங்களில் உரையாடும்போது பெண்கள் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என காவல் துறையினர் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர்.