த்ரிஷா குறித்து திடுக்கிடும் வீடியோவை வெளியிட்ட மீராமிதுன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை மீராமிதுன் அவ்வப்போது திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தனது டுவிட்டர் மூலம் குற்றம்சாட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். அந்த வகையில் தற்போது மீண்டும் த்ரிஷா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது இதே த்ரிஷாவை அவர் பீட்டா உறுப்பினர் என்பதற்காக எல்லோரும் தூற்றினீர்கள். ஆனால் நான் ஒரு உண்மையை த்ரிஷா குறித்து கூறிய போது நான் உங்களுக்கு கெட்டவளாக தருகிறேன், த்ரிஷாவை நீங்கள் ஆதரித்து பேசுகிறீர்கள்.
பீட்டா உறுப்பினரான த்ரிஷா இன்று வரைக்கும் ஆடு கோழி வெட்டப்படுவது குறித்து கவலைப்பட்டார்களா? அவருக்கு நம் நாட்டு காளை மாடுகள் மட்டும்தான் உயிரினமாக தெரிகிறதா? ஜல்லிக்கட்டு நேரத்தில் த்ரிஷாவின் அம்மா மட்டுமே மன்னிப்பு கேட்டார். த்ரிஷா எதுவுமே சொல்லவில்லை.
நெப்போலிடிசம் என்பது ஜாதியில் இருந்து தான் வருகிறது. நான் தற்போது ஓப்பனாக சொல்வது என்னவென்றால் த்ரிஷா தற்போது சினிமா துறையில் இருப்பதும், இன்னமும் படங்கள் நடித்து கொண்டு இருப்பதற்கும் ஒரே காரணம் அவர் உயர் ஜாதி என்பதால்தான்.
நான் பெரியார் பற்றி ஒரு ட்விட் போட்டேன். அதைக்கூட நீங்கள் அனைவரும் கிண்டல் செய்கிறீர்கள். இந்த நெப்போலிடிசத்துடன் கூடிய ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக பெரியார் எவ்வளவு பாடுபட்டார்? அவ்வளவு போராடினார். பெரியார் பிறந்த பூமி, பெரியார் பிறந்த மண் என்று நீங்கள் சும்மா சொல்லி கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் யாருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். இந்த ஜாதியுடன் கூடிய நெப்போடிசம் ஒழிய வேண்டும் என்றால் இன்னொரு பெரியார் பிறந்துதான் இதை மாற்ற வேண்டுமென்றால், பெரியாரின் வழியை பின்பற்றும் நானே உருவெடுத்து இதை கண்டிப்பாக மாற்றி காட்டுவேன்; என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
Kollywood Mafia Gang And The Dark Secrets Kept Wrapped Under The Carpet ! @nakkheeranweb @arivalayam @dinamalarweb pic.twitter.com/WSQjVA10eS
— Meera Mitun (@meera_mitun) July 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com