நித்தியானந்தா மீது அன்பை வெளிப்படுத்திய மீரா மிதுன்: கைலாசாவுக்கு செல்ல ஆசை என டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை தான் உருவாகியுள்ளதாகவும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி கைலாச நாட்டுக்கு என ஒரு ரிசர்வ் வங்கியை ஆரம்பித்து இருப்பதாகவும் கைலாசா நாட்டிற்கு என தனியாக கரன்சியும் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். நித்யானந்தாவின் இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் அவரை ஒரு காமெடியனாகவே பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகையும் சூப்பர் மாடலுமான மீரா மிதுன், திடீரென நித்யானந்தா மீது தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொருவரும் அவரை கேலி செய்து கொண்டிருக்கின்றனர், கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர். அவரைப் பற்றிய நெகட்டிவான செய்திகளை பதிவு செய்து வருகின்றனர். அனைத்து மீடியாக்களும் அவருக்கு எதிராகவே உள்ளது. ஆனால் அவர் தற்போது ஒரு புதிய நாட்டை ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு நாளும் அவர் வளர்ந்து வருகிறார். அவருடைய நாட்டிற்கு செல்ல நானும் விருப்பப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்
ஏற்கனவே இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தாவிடம் கைலாசா நாட்டில் ஓட்டல் ஆரம்பிக்க கடிதம் எழுதிய மதுரை ஹோட்டல் அதிபர் ஒருவர் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Everyone mocked him,Everyone abused him,Everyone ran him down, Every media was against him,but today he creates a new country #Kailasa, going strong day by day. Would love to visit #kailasa soon. Lots of love #nithyanandaparamashivam ♥️https://t.co/n8URIXpAJR
— Meera Mitun (@meera_mitun) August 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments