சேரன் புனிதமானவரா? மீராமிதுனின் லேட்டஸ்ட் சர்ச்சை வீடியோ
- IndiaGlitz, [Wednesday,October 16 2019]
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் மீராமிதுன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் முகின் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நிலையில் தற்போது சேரன் விவகாரம் குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
சேரன் அவர்களைப் பற்றி நான் சில விஷயங்களை கூற போகிறேன். சேரன் அவர்கள் என்று ஒரு புனிதரை போல் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது என்னிடம், தான் ஒரு பெரிய டைரக்டர் என்றும், தான் எந்த பெண்ணிடமும் நெருங்கி பழக மாட்டேன் என்றும், கை கூட கொடுக்காமல் வணக்கம் மட்டும் சொல்வேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த எல்லா பெண்களிடமும் கட்டி பிடித்து கொஞ்சினார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
மேலும் சேரன் அவர்கள் தான் ஒரு இயக்குனர் என்ற கர்வத்துடன் நடந்துகொள்வார். தன்னை அனைவரும் இயக்குனர் என்ற மரியாதை கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். இதனை சரவணன் அவர்களும் பல இடங்களில் கூறியிருந்தார். பிக்பாஸ் வீட்டில் நான் சக போட்டியாளர்கள் ஒதுக்கப்பட்டு கஷ்டப்பட்டு நல்ல ஓட்டுக்கள் வாங்கினேன். எனக்கு மட்டும்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் இருந்து வந்த ஒருவர் என்னை பாராட்டினார்.
ஆனால் சேரன் என்னிடம் நடந்த ஒரு தவறான சம்பவம் குறித்து நான் கூறிய போது யாருமே எனக்கு ஆதரவளிக்கவில்லை. எல்லோரும் சேரனுக்கு மட்டுமே சப்போர்ட் செய்தனர். மேலும் சேரன் ஒரு நல்ல இயக்குனர் என்பதால் உடனே அழுது சென்டிமென்டாக அனைவரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார். அவர் தான் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரைட்ட ஆயிற்றே. இதனால் பழி அப்படியே திருப்பப்பட்டு என் மீது அனைவரும் குற்றஞ்சாட்டும் நிலை ஏற்பட்டது.
இரண்டு பெண்களுக்கு அப்பாவான நான் இப்படி செய்வேனா என்று சேரன் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இரண்டு பெண்களுக்கு அப்பாவான சேரன் என்னிடம் தகாத முறையில் நடந்ததை இரண்டு பெண்களுக்கு அப்பாவான கமலஹாசனும் கண்டிக்கவில்லை என்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. இதே நிலைமை கமலஹாசன் தன்னுடைய பெண்களுக்கு நடந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்றும் எனக்கு தெரியவில்லை.
என்னுடைய அப்பா தற்போது உயிரோடு இல்லை. ஆனால் அவர் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறாக இருக்கும். சேரன் ஒருமுறை என்னிடம் வந்து உன்னுடைய அப்பா உன்னை தவறாக வளர்த்திருக்கிறார் என்று கூறினார். இவர் யார் என் அப்பா குறித்து தவறான பேசுவதற்கு? இவ்வாறு தவறான பேச்சுக்களைப் பேசி விட்டு தற்போது அவர் ஒரு புனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு பெண்ணுக்கு ஒரு தவறு நடந்தால் அந்தப் பெண்ணின் மீதே பழியை திருப்பிவிடுவது நடைபெற்று வருகிறது. சின்மயி விவகாரத்திலும் இதுதான் நடந்தது. நான் பப்ளிசிட்டிக்காக இதையெல்லாம் செய்வதாக ஒருசிலர் கூறுகின்றனர். எனக்கு பப்ளிசிட்டி தேவையென்றால் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஒரே ஒரு போட்டோஷூட் எடுத்தால் போதும், நான் பப்ளிசிட்டி வாங்கிவிடுவேன்.
எனக்கு நடந்த கொடுமைகளை நான் தைரியமாக வெளியே செல்கிறேன். ஏனெனில் நான் ஒரு போல்டான் பொண்ணு. ஆனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள யாருக்கும் அந்த தைரியம் இல்லை. ஏன் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆண் போட்டியாளர்களுக்கு கூட அந்த தைரியம் இல்லை. ஒரு பிரச்சனை நடந்தால் என்ன நடந்தது என்பதை கேட்க கூட எந்த போட்டியாளர்களும் முன்வரவில்லை. சேரன் என்னிடம் குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு கேட்டு இருந்தால் கூட இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் அதற்கு கூட அவர் முன்வரவில்லை’ இவ்வாறு மீராமிதுன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
Those horrible 25 minutes with @directorcheran inside #BiggBossTamil3 house, that paved way for my eviction from BB. Will ever single women get justice. Is #Metoo in TN sleeping. @Chinmayi @vijaytelevision @kaajalActress @cineulagam @IndiaToday @meghakaveri @PTTVOnlineNews. pic.twitter.com/dEqu8ftYA4
— Meera Mitun (@meera_mitun) October 15, 2019
Our #BiggBossTamil3 youth are till now silent watchers of any kind of harrsament to women. When they will voice out without fear. pic.twitter.com/9yydXb6Rxu
— Meera Mitun (@meera_mitun) October 15, 2019