என்னை தமிழக முதல்வர் ஆக்குங்கள்: ஒரே வாரத்தில் நிலைமையை சரிசெய்கிறேன்: மீராமிதுன் சவால்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசின் தீவிர முயற்சியால் தற்போது பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர்களை அடையாளம் காணப்பட்டு வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கையால் இன்னும் ஒரு சில வாரங்களில் கொரனோ வைரஸ் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமாகிய மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்வதோடு தன்னை முதல்வர் ஆக்குங்கள் ஒரே வாரத்தில் நிலைமையை சரி செய்கிறேன் என்றும் சவால் விட்டுள்ளார்
தமிழக அரசு கையாலாகாத அரசு என்றும் உடனடியாக பிரதமர் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் நிலைமையை சரி செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்
மேலும் ஒரே மாதத்தில் கிரிமினல்கள் அனைவரையும் ஜெயிலுக்குள் தள்ளுவேன் என்றும், மூன்றே மாதத்தில் தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்று ஆறு மாதத்தில் இந்திய பொருளாதாரத்தையே மேம்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்
முதல்வன் திரைப்படத்தில் வரும் ஒரு நாள் முதல்வர் செய்யும் அதிரடியை போல தானும் செய்வேன் என்று மீரான்மிதுன் சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Worthless Govt ! TN at its peek destruction @PMOIndia Dissolve the govt immediately. Pass an ordinance, Make me CM. I challenge in a week I bring whole situation in control,save people lives,1month all criminals will be in Jail,3months corruption free,6 months raise indianeconomy
— Meera Mitun (@meera_mitun) June 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments