ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்: உதயநிதியுடன் மீராமிதுன்

  • IndiaGlitz, [Thursday,July 16 2020]

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைப்பக்கத்தில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக சமீபத்தில் அவர் ரஜினி மற்றும் விஜய் மீது குற்றம் சாட்டி இருந்தார் என்பதும் இருவர் மீதும் சைபர் செல்லில் புகார் அளிக்கப் போவதாக கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி அவர் தமிழகத்தின் ஆளும் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் உதயநிதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் உதயநிதியை டேக் செய்து ’புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்’ என்றும், திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை டேக் செய்து ‘நாம் இணைந்து வெல்வோம்’ என்றும் பதிவு செய்துள்ளார்.

மீராமிதுனின் இந்த டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து திமுகவில் மீராமிதுன் சேர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தாத்தா கனவுல வந்து அடிப்பாரு! கண்ணதாசம் பேரனிடம் கூறிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்து வரும் 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்ற நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'செல்லம்மா' என்ற பாடல்

அனிருத்-சிவகார்த்திகேயன் இணைந்த 'டாக்டர்' படப்பாடல் வைரல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'டாக்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ள நிலையில்

காலம் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும்: முருகன் விவகாரம் குறித்து ராகவா லாரன்ஸ்

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன் கந்தகஷ்டி கவசம் குறித்து அருவருப்பான விமர்சன வீடியோ வெளியானதில் இருந்து முருகபக்தர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர்.

8 வருஷமா மெனக்கெட்டு கட்டின பாலம் ஒரு மாதம்கூடத் தாங்கல… சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய தகவல்!!!

பீகார் மாநிலத்தில் 8 வருஷமாக கட்டப்பட்ட பாலம் ஒன்று கடந்த மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

சராசரியாக தினமும் 60ஐ தாண்டும் பலி எண்ணிக்கை: தீவிரமடைகிறதா கொரோனா?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சராசரியாக 4000ஐ தாண்டி வரும் நிலையில் தினமும் சராசரியாக 60 பேர்களுக்கும் மேல் கொரோனாவால்