குடியுரிமை சட்டம் குறித்த பரபரப்பான கருத்தை தெரிவித்த மீராமீதுன்!

  • IndiaGlitz, [Tuesday,December 24 2019]

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் திரை உலகில் உள்ள பிரபலங்கள் ஒரு சிலரை தவிர இந்த சட்டத்தை பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவராகிய நடிகை மீரா மிதுன் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எந்த ஒரு நல்ல சட்டமும் முதலில் தவறாக தோன்றும் என்றும், காலம் போகப் போகத்தான் அதன் நன்மை புரியும் என்றும் மீராமிதுன் கூறியுள்ளார்.

மேலும் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள் அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றும், நாட்டின் பாதுகாப்பை கருதியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டம் இந்தியாவிற்கு தேவையான முக்கியமான சட்டம் என்று மீராமிதுன் கூறியுள்ளார்.

மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக புரிதல் இல்லாமல் மாணவர்களும், ஆதாயத்திற்காக அரசியல் கட்சியினரும் போராடி வருவதாக வருவதாகவும் இந்த போராட்டத்தால் எந்தவிதமான வன்முறையும் நடக்காத வண்ணம் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கம்போல் மீராமிதுன் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

More News

ஒரே துணியில் தூக்கில் தொங்கிய அண்ணன் - தம்பி: சென்னையில் பரபரப்பு

சென்னையில் அண்ணன், தம்பி ஆகிய இருவரும் ஒரே துணியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிக்கும் அனுஷ்கா ஷெட்டி!

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு திரை உலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் நடித்த பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகர் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்தும் அவரது படத்தை இயக்கும் வாய்ப்பை பிரபல நடிகர் ஒருவர் மிஸ் செய்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது

தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு, 100 நாட்கள் கெடு: சினிமாவுக்கு புதுக்கட்டுப்பாடு. 

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களின் படங்கள் 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அவற்றில் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுவது

சிறுமிகள் ஆபாச படம் பார்த்த சென்னை முதியவர் கைது!

குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச படம் பார்ப்பவர்கள் மற்றும் டவுன்லோட் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்