விஜய் டிவி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்: மீராமிதுன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சர்ச்சைக்குரியவராக இருந்த நிலையில் தற்போது தமிழக போலீஸ் மீதும், தமிழக அரசு மீதும், விஜய் டிவி மீதும் கடும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தான் போலீசில் புகார் கொடுத்ததாகவும், ஆனால் போலீசார் ஒருசிலரிடம் லஞ்சம் வாங்கி தன் மீதே வழக்குப்பதிவு செய்ததாகவும், இதை தான் சும்மா விடப்போவதில்லை என்றும், தமிழக காவல்துறை, தமிழக அரசை விட மேலிடத்திற்கு சென்று தனக்கான நீதியை பெறுவேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் எனக்கு சேர வேண்டிய தொகையை விஜய் டிவி இன்னும் தரவில்லை என்றும், பலமுறை அவர்களை தொடர்பு கொண்டும் எந்தவித ரெஸ்பான்ஸ்ஸும் இல்லை என்றும், இந்த பேட்டியை தொடர்ந்து விஜய் டிவி தனக்கான சம்பளத்தை செட்டில் செய்யவில்லை என்றால் ஒரு கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரி வழக்கு தொடர்வேன் என்றும் மீராமிதுன் பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் தான் ஒரு பிசியான செலிபிரிட்டி என்றும், தன்னிடம் விஜய் டிவி நிர்வாகத்தினர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி கெஞ்சியதாகவும், அதற்காக அட்வான்ஸ் பணம் கூட வாங்காமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், தன்னை முழுவதும் பயன்படுத்திவிட்டு தற்போது தூக்கி எறிந்துவிட்டார்கள் என்றும் மீராமிதுன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மீராவின் இந்த பேட்டிக்கு பின் விஜய்டிவியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com