இதை மட்டும் செய்தால் குற்றங்கள் குறைந்துவிடும்: மீராமிதுன் ஐடியா

  • IndiaGlitz, [Sunday,April 12 2020]

கமலஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளியே வந்த போதும் சர்ச்சைக்குறிய நபராகவே காணப்படுகிறார், குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சேரன் மீது பாலியல் புகார் கூறியது மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும் அவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு சமூக வலைதளங்களில் அவருக்கு பெரும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ’சமூக வலைதள கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைத்துவிட்டால் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்கள் குறையும் என்றும் அப்படியே ஒருவேளை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் எளிதில் அவர்கள் மாட்டி கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

பெண்களை ஆபாசமாகவும் மோசமாகவும் கமெண்ட் செய்பவர்களை சைபர் கிரைம் போலீசார் பிடிக்க இது மிகவும் வசதியாக இருக்கும் என்றும் அவர் ஐடியா தெரிவித்துள்ளார். மீராமிதுனின் இந்த யோசனை நல்ல யோசனை தான் என்றாலும் ஏற்கனவே இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பதும் இதற்கு பதிலளித்த மத்திய அரசு சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பதில் அளித்து விட்டதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீராமிதுனின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை அளித்து வருகின்றனர் ’நீங்கள் ஆபாசமாக புகைப்படங்களை பதிவு செய்யாமல் இருந்தாலே நாட்டில் பாதி குற்றங்கள் குறைந்துவிடும் என்று பலரும் கமெண்ட் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.