இந்த அரசு சுத்த வேஸ்ட்: மீராமிதுன் பகீர் குற்றச்சாட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடனும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட அனைவர் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு செய்ய வேண்டும் என்றும், கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் இவர்கள் பணத்தை மீட்டால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் கொடுக்கலாம் என்றும் கூறியிருந்தார்
மீராமிதுனின் இந்த டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமின்றி அவருக்கு மிரட்டலும் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது அவர் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் உண்மையை பேசியபோதிலும் விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து ரொம்ப சீப்பாக நடந்து கொள்கின்றார்கள். அவர்களின் ஆட்கள் என்னை மிரட்டி என்னுடைய டுவிட்டை டெலிட் செய்ய சொல்கிறார்கள். இந்த அரசு தவறாக செயல்படுகிறது. ஒவ்வொருவரும் சுத்த வேஸ்ட். தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. என்னென்ன தவறு நடக்கின்றது என்பதை விரைவில் விளக்குகின்றேன்’ என்று கூறியுள்ளார். மீராமிதுனின் இந்த டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Jus because I talk truth , very cheaply @Vijayabaskarofl your sending your people to threaten me to delete the tweet or what, talk to me directly, this govt is totally wrong , everybody is useless and TN is going down @PMOIndia I can explain everything
— Meera Mitun (@meera_mitun) April 28, 2020
What's going wrong !
Why don't we do IT RAID at all these ministers place especially @EPSTamilNadu @CMOTamilNadu @Vijayabaskarofl, find crores of unofficial money stocked up and give one lakh per home of every district in tamilnadu at this economical quarantine lockdown time @PMOIndia @IndiaToday
— Meera Mitun (@meera_mitun) April 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com