ஹூக் மாட்டிவிட வேற ஆளே கிடைக்கலையா மீரா? நெட்டிசன்கள் கலாய்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் கடந்த ஒரு வாரமாக பார்த்ததில் வனிதா மற்றும் மீராமிதுன் ஆகிய இருவருமே பிரச்சனைக்குரியவர்களாக தென்படுகின்றனர். வனிதாவின் கேரக்டரே அதிகாரம் செய்யும் தொனி என்றால், மீராமிதுன் தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கொஞ்சம் திமிராகவும் செயல்படுவதாக அவரது செயல்களில் இருந்து தெரிய வருகிறது.
நேற்று பிக்பாஸ் வீட்டில் உடை மாற்றி கொண்டிருந்த மீராமிதுன், பல பெண்கள் இருந்தும் மோகன் வைத்யாவிடம் தனது ஹூக்கை மாட்டிவிடும்படி கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மோகன் வைத்யாவும் அதை நாகரீகமாக மறுத்திருக்கலாம், அல்லது ஹூக்கை மாட்டிவிட்டு அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் இதனை யாரிடம் சொன்னால் இந்த விஷயம் பெரிதாகுமோ அவரிடம் சொல்லியுள்ளார். ஆம், வனிதாவிடம் இந்த விஷயத்தை சொல்ல, வனிதா மீராமிதுனிடம் சொல்ல இதுவொரு பிரச்சனையாக நேற்று வெடித்தது. இதனையடுத்து ஹூக் மாட்டிவிட வேற ஆளே கிடைக்கலையா மீரா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் அமைதியாக அறிவுரை கூறிய சேரனையே கடுப்பேத்திவிட்டார் மீராமிதுன். 'ஏன் பாத்திரம் கழுவவில்லை' என சேரன் மீராவிடம் கேட்டபோது தனக்கு ஜலதோஷம் என கூறிய மீரா, 'ஜலதோஷம் இருக்கும்போது ஏன் மழையில் நனைந்தாய்?' என்ற கேள்விக்கு எனக்கு மழை பிடிக்கும் அதனால் நனைந்தேன் என்று பதில் கூறினார்.
அதேபோல் 'நீதி, நேர்மை இருந்தால் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கலாம்' என பேசிய மீராவிடம் 'அதுமட்டும் இருந்தால் போதாது மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்' என்று கூறியபோது 'என்னால் அப்படியெல்லாம் இருக்க முடியாது, அதேபோல் யாருடைய வேலையையும் நான் செய்ய மாட்டேன், என் வேலையை மட்டுமே செய்வேன்' என்று கூறி சேரனையே கடுப்பேற்றிவிட்டார் மீரா மிதுன். இவர் பேசுவதையும் செய்வதையும் பார்க்கும்போது வனிதா இவரை டார்ச்சர் செய்வது சரியோ? என்று கூட எண்ண தோன்றுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments