எதிர்பாராத சந்திப்பு: பிரபல அரசியல்வாதி சந்திப்பு குறித்து மீராமிதுன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ’பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியிலும் சரி, அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சரி, மீராமிதுன் ஒரு சர்ச்சைக்குரியராகவே காணப்பட்டார். அவர் அளித்த பேட்டிகள், கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதில் அவர் சீமான் குறித்து கூறிய போது ’தன்னுடைய பணிகளில் மிகச் சிறந்தவராக இருப்பவரும் அரசியல் மற்றும் வாழ்க்கையில் பலருடைய பாராட்டுக்களை பெற்றவருமான சீமான் அவர்களுடனான இந்த சந்திப்பு எதிர்பாராத ஒன்று என்றும், மிகவும் பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்ட மனித பயத்துடன் கூடிய ஒருவர் என்றும் சீமானை மீராமிதுன் புகழ்ந்துள்ளார்.
சீமான் மற்றும் மீராமிது இணைந்து எடுத்துக்கொண்ட இந்த செல்பி புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
An unexpected meet @SeemanOfficial
— Meera Mitun (@meera_mitun) January 17, 2020
Quality interaction of career , politics , life and greet ?? Very positive gud vibe human ?? pic.twitter.com/2Ko0GumxkF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments