தினமும் என்ன அழவைக்கிறாங்களே! மிரளும் மீரா, உக்கிரத்தில் வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து போட்டியாளர்களுடன் கலந்து கொண்ட மீரா மிதுனை பார்த்தவுடனே அபிராமி வெறுக்க தொடங்க அவருக்கு ஆதரவாக வனிதாவும் இருப்பதால் தினமும் இருவரும் சேர்ந்து மீராவை வச்சு செய்து வருகின்றனர். அதிலும் வனிதா கேப்டனாக இருப்பதால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீராவை தினமும் அழ வைக்கின்றார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் மீண்டும் மீரா மிதுன் அழுகிறார். என்னை ஒருநாளைக்கு ஒருதடவை அழ வைக்கலைன்னா இவங்க யாருக்குமே தூக்கம் வராது என்று மீரா புலம்ப, இன்னொரு பக்கம் இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது' என்று வனிதா உக்கிரமாக உள்ளார். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருப்பதாகவும், இப்படியெல்லாம் என்னால இருக்க முடியாது, நான் அந்த மாதிரி கேரக்டர் கிடையாது' என்றும் மீரா கதறி அழ அவருக்கு சாக்சி ஆறுதல் கூறுகின்றார்.

மீரா மிதுன் மீது முதலில் ஆத்திரப்பட்ட அபிராமி கூட அவருடன் சமாதான செல்ல முயற்சிக்கின்றார். ஆனால் வனிதா, மீராவை சும்மா விடமாட்டார் போல் தெரிகிறது. வனிதாவின் டார்ச்சருக்கு தற்போது வரை அழுது கொண்டிருக்கும் மீரா, பதிலடி கொடுக்க தொடங்கினால் வனிதாவின் உக்கிரம் இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. பிக்பாஸ் திரைக்கதையில் மீரா வீறுகொண்டு எழும் காட்சி எப்போது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

முகன்ராவ் மீது ஐஸ்வர்யா தத்தாவுக்கு காதலா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று 15 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இரண்டே நாளில் 16வது போட்டியாளராக மீராமிதுன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில்

ஹரிஷ் கல்யாணை அடுத்து லூஸ்லியாவுக்கு ஆதரவு தரும் இன்னொரு பிக்பாஸ் பிரபலம்!

ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பட பாடலை நேற்று லூஸ்லியா பாடியதை அடுத்து நடிகரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ஹரிஷ் கல்யாண்,

பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல நான் தயார்! யாஷிகா ஆனந்த்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா, பல நேரங்களில் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தாலும்,

இந்தியா-மே.இ.தீவுகள் போட்டியை நேரில் ரசித்து வரும் தமிழ் சினிமா நட்சத்திர ஜோடி!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகள்

வெயில், மழை, புயலுடன் போராட்டம்: சிம்பு குறித்து கவுதம் கார்த்திக்

சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். சமீபத்தில் சிம்புவிடம் கவுதம் கார்த்திக்