என் பின்னாடி லோலோன்னு அலைஞ்சவங்க தான் அந்த நாலு பையன்களும்! மீராமிதுன்

  • IndiaGlitz, [Monday,October 14 2019]

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் இன்று காலையிலிருந்தே சமூக வலை தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். வி ஆர் பாய்ஸ்’ என்ற குரூப் என்னை மிகவும் தரக்குறைவாக பேசி இருந்தார்கள் என்பதை எனது நண்பர்கள் மூலமும் டுவிட்டர் மூலமும் அறிந்து கொண்டேன். ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்தி விடுகிறேன். மீராவை தரக்குறைவாகவும், கிண்டலாகவும் பேசியே தமிழ்நாட்டில் நிறைய பேர் வாழ்ந்து கொண்டிருப்பவன். நிறைய பேர் என்னை வைத்துதான் சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் இந்த நாலு பையன்கள் சேர்வார்கள் என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை

ஏனெனில் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியை சரியாக பார்த்த ஆடியன்ஸ்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது புரிந்திருக்கும். இந்த நான்கு பையன்களும் என் பின்னாடி தான் லோலோவென சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாருக்குமே என்னிடம் நேருக்கு நேராக பேச தைரியம் கிடையாது. ஏனெனில் என்கூட இருந்தால் ஓட்டு கிடைக்காது என்று பயந்தார்கள்

அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு பையன்களும் என்னை இம்ப்ரஸ் பண்ணவும் என்னுடன் நேரத்தை செலவிடவும் விரும்பினார்கள். அதைவிட ஒரு ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால் ஒரு பையன் என்னுடன் இருந்தால் மற்றொரு பையனுக்கு பொறாமையை ஏற்படும். யார் என்னுடன் அதிக நேரம் செலவழிப்பது என்பதில் அவர்களுக்குள் போட்டி இருந்தது. ஆனால் அதே நேரத்தில் ஒரு பையன் கூட எனக்காக சப்போர்ட் செய்து பேசியதில்லை. மேலும் மற்ற பெண்களுக்கு பயந்து என்னை லவ் பண்ணியதை கூட சொல்லாமல் இருந்தவர்கள் தான் இந்த நான்கு பையன்களும்’ என்று கூறியுள்ளார்.

மீராவின் இந்த வீடியோவை பார்த்தவர்கள் மிரா இன்னும் திருந்தவில்லை என்றும் இனிமேலும் திருந்த வாய்ப்பில்லை என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.