ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,June 22 2017]
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக பீகார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் அவர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இவருக்கு அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார் அவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இவரை ஆதரிக்கும் என தெரிகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதாலும், அதிமுக, தெலுங்கு தேசம், உள்பட முக்கிய கட்சிகள் ஆதரவு கொடுத்திருப்பதாலும் பாஜக ஆதரவு வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மீராகுமாரை வெற்றி பெற செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்