தமிழில் டப் ஆகும் மீரா ஜாஸ்மினின் மலையாள படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபகாலமாக மலையாளத்தில் வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. சூப்பர் ஸ்டாரின் 'சந்திரமுகி', உலக நாயகனின் 'பாபநாசம்', ஜோதிகாவின் '36 வயதினிலே' போன்ற ஒருசில படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். தற்போதுகூட மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'பெங்களூர் டேய்ஸ்' திரைப்படம் ஆர்யாவின் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன மற்றொரு திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழில் ரன், சண்டக்கோழி உள்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் நடித்த "மிஸ் லேகாதரூர் கண்ணுனாது" என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. மீரா ஜாஸ்மின் பார்வையற்றவராக நடித்திருந்த இந்த படம் கேரள ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படம். இந்த படத்தின் ஸ்கிரிப்டை எழுதும்போது, லேகாதரூண் கேரக்டருக்கு மீராஜாஸ்மினைத்தான் மனதில் நினைத்து எழுதியதாக இந்த படத்தின் இயக்குனர் ஷாஜியெம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
பார்வையற்ற ஒரு பெண் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்துகிறார். அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், சவால்கள் அதை அவர் எப்படி சமாளிக்கின்றார் என்பதுதான் கதை. கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் மீரா ஜாஸ்மின், பத்ரி, 'ஒருதலை ராகம்' சங்கர், கீதா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் நாராயணன் இசையமைத்த இந்த படத்தை சரணம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout