ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகி வரும் மீரா ஜாஸ்மின் நடித்த 'குயின் எலிசபெத்'
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாளத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற "குயின் எலிசபெத்" திரைப்படம் ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கிறது. இந்தத் திரைப்படத்தை M. பத்மகுமார் இயக்கியுள்ளார். பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். நரேன், ஸ்வேதா மேனன் மற்றும் V.K.பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரு கலக்கலான பொழுதுபோக்கு காமெடி படமாக, இப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் மற்றும் நடிகர் நரேன் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இணைந்துள்ளனர்.
திருமணமாகாத மிடில் ஏஜ் யுவதியான மீரா ஜாஸ்மின், தன்னைச் சுற்றி இருப்பவர்கள், தன்னை வெறுக்கும்படியான மனிதராக, யாருடைய துணையும் தேவையில்லை என வாழ்கிறார். நரேன் அவரது அன்பைப் பெற பல முயற்சிகள் செய்கிறார். பிசினஸ் விசயமாக கோயம்புத்தூர் செல்லும் மீரா ஜாஸ்மினை அந்த பயணம் முழுதாக மாற்றுகிறது.
திருமணமாகாத ஒரு நடுத்தர வயது பெண்ணின் வாழ்க்கையை, காதலைக் கண்டடையும் அவளின் பயணத்தை இந்த படம் அருமையான காமெடி கலந்து சொல்கிறது.
இந்த படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான M.பத்மகுமார் கூறியதாவது, ‘
குயின் எலிசபெத் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு உண்மையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் தந்த அன்பு எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தந்தது. இப்படைப்பு தற்போது ZEE5 வழியே உலகளாவிய பார்வையாளர்களிடம் சேரவுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியருக்கு காதலர் தினத்தை விடச் சிறந்த தருணம் கிடைக்காது. உங்கள் இதயங்களை கொள்ளை கொள்ளும் இந்த படத்தினை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இப்படம் உங்கள் எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படுத்துமென நம்புகிறேன்.
நடிகை மீரா ஜாஸ்மின் கூறியதாவது, ‘குயின் எலிசபெத் கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எலிசபெத், கண்டிப்பான நடத்தை கொண்ட, வலுவான, சுதந்திரமான பெண். எலிசபெத் கதாபாத்திரம் என் மனதிற்கு மிக நெருக்கமான பாத்திரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரைக்கு வருகிறேன், எனவே பார்வையாளர்கள் இந்த கதாபாத்திரத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஆர்வம் இருந்தது, திரையரங்கு வெளியீட்டின் போது ரசிகர்கள் தந்த அன்பும் ஆதரவும் மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ரசிகர்களின் அன்புக்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இப்படம் ZEE5 இல் டிஜிட்டல் ப்ரீமியராக உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களுக்கு சென்றடைவது மகிழ்ச்சி. பார்வையாளர்களின் கருத்துக்களை அறிய மிக ஆவலாக உள்ளேன்.
நடிகர் நரேன் கூறியதாவது, ‘இது ஒரு நம்பமுடியாத பயணம். குயின் எலிசபெத் படத்தில் அலெக்ஸ் பாத்திரத்தில் நடித்தது அருமையான அனுபவம். தேசம் முழுக்க படத்தைக் கொண்டாடியதுடன் என் கதாபாத்திரத்தை தனித்து பாராட்டியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நடிகை மீரா ஜாஸ்மினுடன் இணைந்து நடித்தது, மறக்க முடியாத அனுபவம். ஷுட்டிங்கில் நாங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டோம். இயக்குநர் M.பத்மகுமாரின் பார்வையும் வழிகாட்டுதலும் மிகவும் உதவிகரமாக இருந்தது. ZEE5 இன் இந்த டிஜிட்டல் வெளியீட்டில் உலகம் முழுக்கவுள்ள பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
அசத்தலான ரோம் காம் திரைப்படமான "குயின் எலிசபெத்" படத்தினை ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.
Trailer Link: https://zee5.onelink.me/RlQq/elizabeth
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments