நடிகை சமந்தா போலவே தற்காலிக ஓய்வை அறிவித்த முக்கிய நடிகை… ரசிகர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியிருக்கும் தகவல் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாள சினிமா நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் ‘ரன்‘ திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தனது துரு துரு நடிப்பால் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவிற்கு வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து ‘ஆயுத எழுத்து‘ திரைப்படத்திலும் முக்கியத்துவம் பெற்றார். இதையடுத்து விஜய், அஜித் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்த ‘சண்டகோழி’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.
அதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் நடித்துவந்த இவர் கடந்த 2011 இல் துபாயைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் அனில் ஜான் டைட்டஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த இவர் கடந்த 2016 இல் கணவரை விட்டு பிரிந்து விட்டதாகவும் விரைவில் விவாரகத்து பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மின் முன்பை போலவே படு ஸ்லிம்மான தோற்றத்துடன் வலம் வந்தார். அந்த வகையில் இவர் நடித்திருந்த ‘விமானம்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது 41 வயதான நிலையில் நடிகர் மாதவன் மற்றும் சித்தார்த், நயன்தாரா நடித்துவரும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் இணைந்துள்ள நிலையில் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருக்கப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘டெஸ்ட்‘ திரைப்படத்தில் நடிகர் மாதவன், சித்தார்த்துடன் இணைந்து நடிக்கிறேன். ஏற்கனவே இறுதிச்சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கிய சசிகாந்துடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி எனத் தெரிவித்த அவர் நடிகை நயன்தாராவுன் இணைந்து நடிக்க ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுவரை சிறப்பான பயணமாகவே எனது சினிமா பயணம் இருந்து வந்துள்ளது. நடிகையாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சியானது. எனது தனிப்பட்ட வளர்ச்சி காரணமாக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருக்கலாம் என முடிவு செய்துள்ளேன். பின்னர் வந்து பிடித்த படங்களில் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். மேலும் பயணம் தொடர்பான எனது சமூகவலைத் தளத்தளப் படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து நேர்மறையாக கருத்துகள் வருகின்றன. என்னைப் பின்தொடர்பவர்களுக்கு இதையெல்லாம் பகிர்வதற்கு சமூகவலைத் தளம் உதவிகரமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே முன்னணி நடிகையான சமந்தா ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி இருக்கப் போகிறார் என்று தகவல் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை மீரா ஜாஸ்மின் தனிப்பட்ட வளர்ச்சிக்காக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருக்க முடிவெடுத்துள்ளேன். பிறகு மீண்டும் வந்து பிடித்தமான படங்களில் நடிப்பேன் எனக் கூறியுள்ள தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com