மீரா ஜாஸ்மின்  வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..!

  • IndiaGlitz, [Friday,April 05 2024]

நடிகை மீரா ஜாஸ்மின் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகத்தை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாதவன் நடித்த ’ரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை மீரா ஜாஸ்மின், அதன்பின் விஜய்யுடன் ’புதிய கீதை’ அஜித்தின் ’ஆஞ்சநேயா’ விஷாலுடன் ’சண்டக்கோழி’ மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஆயுத எழுத்து’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

சமீபத்தில் கூட அவர் சில மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது நயன்தாரா, மாதவன் நடித்து வரும் ’தி டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற மீரா ஜாஸ்மின், கேரளா அரசின் விருது, தமிழ்நாடு அரசு விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் தனது தந்தை காலமாகிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்துடன் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் மீரா ஜாஸ்மின் தந்தையுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.