பிரபல நடிகருக்கு பெண் எம்பி கேட்ட கேள்வி: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 22 2020]

வரலாற்றை நம்பாத ஒரு நடிகர் எதற்காக தனது மகனுக்கு தைமூர் என்று பெயர் வைக்க வேண்டுமென பெண் எம்பி ஒருவர் பிரபல நடிகரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான திரைப்படம் ’தான்ஹாஜி’. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான். இவர் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ’தான்ஹாஜி பற்றிய விஷயத்தை தான் வரலாறாக கருதவில்லை என்றும் இந்தியா என்ற கருத்தாக்கமே பிரிட்டிஷ்காரர்கள் வந்த பின்னர் தான் தோன்றியது என்று கூறியிருந்தார்.

சைப் அலி கானின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த பெண் எம்பி மீனாட்சி லேகி என்பவர் இது குறித்து கூறிய போது ’துருக்கியை சேர்ந்த தைமூர் என்ற கொடுங்கோல் அரசன் பெயரை வரலாற்றை நம்பாத சயிப் அலி கான் தனது மகனுக்கு சூட்டியது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

துருக்கியைச் சேர்ந்த தைமூர் என்ற அரசன் 17 ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படையெடுத்து பல இந்திய மக்களின் தலையை வெட்டி வீழ்த்தி கொடுங்கோல் ஆட்சி புரிந்தவன் என்று வரலாறு கூறுகிறது என்பதும், இந்த விஷயத்தைத்தான் பெண் எம்பி மீனாட்சி லேகி மறைமுகமாக சுட்டிக் காட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

எனக்காக ரோட்டில் படுத்து தூங்குவதெல்லாம் கொஞ்சம் ஓவர்: ரசிகரை கண்டித்த பிரபல நடிகை!

என்னை பார்ப்பதற்காக ரோட்டில் படுத்து தூங்கு போதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரிகிறது என பிரபல தமிழ் நடிகை ஒருவர் கூறியிருப்பது கூறியுள்ளார் 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை, தமிழக அரசின் நிலைப்பாடு- பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு என்ன முடிவு எடுத்துள்ளது

ஒரு போலீஸ்காரன் எப்ப அடிக்கணும், எப்ப அமைதியா இருக்கணும்: பொன்மாணிக்கவேல் டிரைலர்

முதல் முறையாக பிரபுதேவா போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள 'பொன்மாணிக்கவேல்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

ஜுன் 1 முதல் நாடு முழுவதும் ‘ஒரே தேசம், ஒரே ரேஷன்’ கார்டு திட்டம் நடைமுறை  - மத்திய அமைச்சர் அறிவிப்பு

‘ஒரு நாடு, ஒரு ரேஷன்’ அட்டை திட்டம் ஜுன் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்

3 வயது குழந்தைக்கு மது கொடுத்துவிட்டு கல்லூரி மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த பெண்: அதிர்ச்சி தகவல்

கல்லூரி மாணவர்கள் மூவருடன் உல்லாசமாக இருந்து பெண்மணி ஒருவர் தனது குழந்தை அழுது தொல்லை கொடுத்ததால் அந்த குழந்தைக்கு மது கொடுத்த ஈவிரக்கமற்ற பெண்ணின் செயல் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது