பிரபல நடிகருக்கு பெண் எம்பி கேட்ட கேள்வி: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 22 2020]

வரலாற்றை நம்பாத ஒரு நடிகர் எதற்காக தனது மகனுக்கு தைமூர் என்று பெயர் வைக்க வேண்டுமென பெண் எம்பி ஒருவர் பிரபல நடிகரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான திரைப்படம் ’தான்ஹாஜி’. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான். இவர் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ’தான்ஹாஜி பற்றிய விஷயத்தை தான் வரலாறாக கருதவில்லை என்றும் இந்தியா என்ற கருத்தாக்கமே பிரிட்டிஷ்காரர்கள் வந்த பின்னர் தான் தோன்றியது என்று கூறியிருந்தார்.

சைப் அலி கானின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த பெண் எம்பி மீனாட்சி லேகி என்பவர் இது குறித்து கூறிய போது ’துருக்கியை சேர்ந்த தைமூர் என்ற கொடுங்கோல் அரசன் பெயரை வரலாற்றை நம்பாத சயிப் அலி கான் தனது மகனுக்கு சூட்டியது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

துருக்கியைச் சேர்ந்த தைமூர் என்ற அரசன் 17 ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படையெடுத்து பல இந்திய மக்களின் தலையை வெட்டி வீழ்த்தி கொடுங்கோல் ஆட்சி புரிந்தவன் என்று வரலாறு கூறுகிறது என்பதும், இந்த விஷயத்தைத்தான் பெண் எம்பி மீனாட்சி லேகி மறைமுகமாக சுட்டிக் காட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.