368 எபிசோடுகளுடன் முடிந்த 'மீனா' சீரியல்.. சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் என்ன?

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

சன் டிவியில் காலை திங்கள் முதல் சனி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘மீனா’ தொடர் 368 எபிசோடுகளுடன் நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த சீரியலில் நாயகி மீனா பிரிந்து போன இரண்டு குடும்பங்களை இணைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தான் கதை அம்சம் என்ற நிலையில் இந்த சீரியலில் மீனா கேரக்டரில் ஆனந்த ராகம் புகழ் இந்து சவுத்ரி நடித்திருந்தார். மேலும் இந்த தொடரில் ஜெய் ஸ்ரீனிவாச குமார், அபிஷேக் சங்கர், விக்னேஷ், சோனியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

‘மீனா’ தொடர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பான நிலையில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த சீரியலுக்கு பதிலாக புனிதா என்ற தொடர் வரும் திங்கள் முதல் ஆரம்பமாக இருப்பதாகவும் இந்த தொடர் நண்பர்கள் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாவுக்கு பதிலாக ஒளிபரப்பாக இருக்கும் புனிதா ரசிகர்களின் மனதை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

காதல்ல பட்டைய கிளப்புனும்.. பிக்பாஸ் லாஸ்லியாவின் 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' டீசர்..!

பிக் பாஸ் லாஸ்லியா நடித்த மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 'கோட்' திரைப்படம்.. கண்டு ரசிக்கும் குடும்ப ஆடியன்ஸ்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரூ.450 கோடிக்கு மேல் திரையரங்குகளில் வசூல் ஆனது என்பது தெரிந்தது. திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற

ஆயுத பூஜை ஸ்பெஷல்: நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் வைரல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

'ஜெயிலர்', 'கோட்' பட முதல் நாள் வசூலை முந்தியதா 'வேட்டையன்' ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, 5வது நாளில் ரீஎன்ட்ரி.. பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்..!

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, ஐந்தாவது நாளில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.