'பாபநாசம் 2' படத்தில் நடிக்கின்றேனா? மீனா அளித்த பதில்!

  • IndiaGlitz, [Saturday,July 03 2021]

மோகன்லால், மீனா நடித்த ’த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ’த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகம் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் ’பாபநாசம் 2’ படமும் விரைவில் உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் கவுதமி நடிக்க வாய்ப்பில்லை என்பதால் அவருக்கு பதிலாக மீனாவே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த மீனா, ‘பாபநாசம் 2’ படத்தில் நடிக்கிறீர்களா என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ’கமல்ஹாசன் அவர்களிடம் கேளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக மற்றொரு கேள்விக்கு அவர் பதில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய ஃபேவரைட் ஹீரோ தளபதி விஜய் என்று கூறிய மீனா, தனக்கு சிவாஜி கணேசன், நெடுமுடி வேணு, நாகேஸ்வரராவ் ஆகியோர்களின் நடிப்பு பிடிக்கும் என்றார். தன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’நீங்கள் கொஞ்சம் லேட்’ என கூறி தனது திருமண புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ரசிகர்களின் கேள்விக்கு மீனாவின் இந்த சுவராசியமான பதில்கள் தற்போது வைரலாகி வருகின்றன.