நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணமா? அவரே அளித்த விளக்கம்..!
- IndiaGlitz, [Thursday,March 23 2023]
நடிகை மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் சமீபத்தில் அவரே இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலமானார். அவருடைய மறைவு மீனா மற்றும் அவரது மகளுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில் மீனாவின் தோழிகள் அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். தற்போது ஒரு சில படங்களிலும் நடிக்க மீனா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் ஒருவர் மீனாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து மீனா விளக்கம் அளித்த போது ’என்னுடைய கணவர் இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அதற்குள் எப்படி இது போன்ற வதந்திகள் வெளியாகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போதைக்கு நல்ல கதைகள் அமைந்தால் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவேன். அதேபோல் என் மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவேன், இதுதான் எனக்கு முக்கியம்’ என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து மீனா இரண்டாவது திருமணம் குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.