மீன ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

  • IndiaGlitz, [Tuesday,July 02 2024]

ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனலில், பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் 2024ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான மீன ராசி பலனை கணித்துள்ளார். பொதுவாக இந்த மூன்று மாதங்களில் எந்த ராசிக்கும் பெரிய பாதிப்புகள் இல்லை என்றும், அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் நல்ல பலன்களே கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீன ராசி அன்பர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த ஆண்டுக்கான ராசி பலனை ஆதித்ய குருஜி அவர்கள் கணித்துள்ளார். வரும் முன் வருவது சொல்வது தான் ஜோதிடம் என்று கூறியுள்ள அவர், அடுத்த ஆண்டு ஜென்ம சனி தொடங்க இருப்பதால், இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் சில பாதிப்புகளை மீன ராசிக்காரர்கள் சந்திக்க நேரிடும் என்கிறார். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

குறிப்பாக காதல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் ஆதித்ய குருஜி. அடுத்த ஆண்டு காதல் ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தங்கள் நல்ல குணமே பிரச்சனையாகிவிடாமல் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

வேலை விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலையை விட்டுவிடக்கூடாது என்றும், அமைதியாக வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். தொழில், வ్యాபாரம் போன்றவற்றில் மிகவும் கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

இது 50 வயதிற்குட்பட்ட மீன ராசிக்காரர்களுக்கு பொருத்தமான பலன் என்று குறிப்பிட்டுள்ளார் ஆதித்ய குருஜி. அனைத்து விஷயங்களிலும் கவனமாகவும், நிதானமாகவும் இருப்பதே இந்த காலகட்டத்தில் சிறந்தது.