'தலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 10 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே

நேற்று இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தாலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பதும் அவருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை குஷ்பு அல்லது நடிகை மீனா தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக எஜமான், வீரா ஆகிய படங்களில் மீனா நடித்து உள்ளார் என்பதும் தற்போது மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக ‘தலைவர் 168’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

விஜய்யின் 'தளபதி 64' படத்தில் பிரபுதேவா கனெக்சன்

விஜய், விஜய்சேதுபதி முதல்முறையாக இணைந்து நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் தினந்தோறும்

தோனி..தோனி என்று கத்திய ரசிகர்கள். விரக்தியை வெளிப்படுத்திய விராட்.

நேற்றைய போட்டியின் போது ரிஷப பந்த் கேட்சை விட்டதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி..தோனி என்று கத்தினார். இதனால் விரக்தியடைந்த கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடையே அமைதியாய்

2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி..!

2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி முடி சூட்டப்பட்டார்

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு, 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு. பலர் மாயம்.

நியூசிலாந்தில் உள்ள எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்துள்ளவும் போலீசார் தெரிவிக்கின்றனர்...

சுந்தர் பிச்சையால் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடி லாபம் அடைந்த கூகுள் நிறுவனர்கள்

சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்கள் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ