கணவர் இல்லாத முதல் திருமண நாள்: மீனாவின் உருக்கமான பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி காலமான நிலையில் நேற்று மீனா தனது திருமண நாள் குறித்து உருக்கமாக செய்த பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நுரையீரல் உள்பட ஒரு சில பிரச்சினை காரணமாக நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜூன் 25-ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவிற்கு ரஜினிகாந்த், சரத்குமார், குஷ்பு உள்பட பல தமிழ் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சிலர் மீனாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை மீனாவின் திருமண நாள் நேற்று என்பதால் அது குறித்து மீனா உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் நீங்கள் எங்களுடைய அழகான ஆசீர்வதிக்கப்பட்ட நபராக இருந்தீர்கள். ஆனால் எங்களிடம் இருந்து விரைவில் நீங்கள் பறிக்கப்பட்டு விட்டீர்கள். இருப்பினும் எங்களுடைய இதயங்களில் என்றென்றும் நீங்கள் இருப்பீர்கள்.
உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான நல்ல இதயங்கள் எனக்கு ஆறுதல் கூறியதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களுடைய அன்பும் ஆதரவும் கண்டிப்பாக எங்கள் குடும்பத்திற்கு தேவை. அன்பும் ஆதரவும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை கொண்டிருப்பதற்கு நாங்கள் மிகவும் நன்றி உடையவர்களாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout