ஹிந்தியில் ஏன் பேச வேண்டும்? நான் தென்னிந்தியர்.. நடிகை மீனா பதிலடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நடிகை மீனா கலந்து கொண்ட நிலையில், நிருபர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசுமாறு கேட்டபோது, "நான் ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? இது தென்னிந்திய திரைப்பட விழா, நான் தென்னிந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன்," என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா என்பதும், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். அந்த விழாவில் பங்கேற்றபோது, மீனாவிடம் செய்தியாளர்கள் ஹிந்தியில் பேசுமாறு கேட்டனர். அப்போது, "இது என்ன, ஹிந்தி விழாவா? பிறகு ஏன் என்னை அழைத்தீர்கள்?" என்று சிரித்துக்கொண்டே கேள்வி கேட்டார். மேலும், "நான் ஒரு தென்னிந்திய விழா என்றுதான் நினைத்தேன். தென்னிந்திய படங்கள், தென்னிந்திய நடிகர்கள் சிறப்பானவர்கள். நான் ஒரு தென்னிந்தியர் என்பதை பெருமை கொள்கிறேன்," என்றார்.
வட இந்திய, தென் இந்திய சினிமா உலகினரை ஒன்றிணைத்து பெரிய நிகழ்வாக இந்த விழா நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள நடிகை மீனாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Meena 👍 pic.twitter.com/FBieQ3AOR9
— மீனா என் தேவதை (@Meena76198342) September 30, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments